;
Athirady Tamil News

40 கைதிகளில் 37 பேரின் மரண தண்டனை குறைப்பு: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவு

0

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மரண தண்டனை கைதிகளின் தண்டனையை குறைத்து உத்தரவிட்டுள்ளார்.

மரண தண்டனை குறைப்பு
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 40 கைதிகளில் 37 பேரின் மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

டிசம்பர் 23ம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி ஜோ பைடன் 37 கைதிகளுக்கு மரண தண்டனையில் இருந்து பரோல் இல்லாமல் ஆயுள் தண்டனையாக குறைத்து அறிவித்துள்ளார்.

3 கைதிகளுக்கு தண்டனை குறைப்புக்கு மறுப்பு
அதே நேரம் இந்த தண்டனை குறைப்பில் 2013ம் ஆண்டு பாஸ்டன் மராத்தான் குண்டு வெடிப்பை நடத்திய செச்சென் நாட்டில் பிறந்த குற்றவாளி Dzhokhar Tsarnaev உட்பட 3 கைதிகளின் தண்டனையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலையிட மறுத்துவிட்டார்.

பாஸ்டன் மராத்தான் குண்டு வெடிப்பில் 3 பேர் கொல்லப்பட்டதுடன், 180 பேர் வரை காயமடைந்தனர்.

2015ல் சார்லஸ்டனில் 9 ஆப்பிரிக்க-அமெரிக்க தேவாலயத்திற்கு சென்ற பக்தர்களை கொன்ற Tsarnaev, Dylann Roof மற்றும் 2018-ல் பிட்ஸ்பர்க் ஜெப ஆலயத்தில் 11 பேரை கொன்ற ராபர்ட் போவர்ஸ் ஆகியோரின் மரண தண்டனைகளை குறைக்க ஜோ பைடன் மறுத்துவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.