;
Athirady Tamil News

யாழில் தனது மனைவியுடன் சேட்டை புரிந்த பொலிஸ் உத்தியோகஸ்தரை மடக்கி பிடித்து பொலிஸில் ஒப்படைத்த கணவன்

0

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவருடன் சேட்டை புரிந்த பொலிஸ் உத்தியோகஸ்தரை , பெண்ணின் கணவரும் , ஊர் இளைஞர்களும் ஒன்றிணைந்து மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் அப்பகுதியில் தையலகம் நடாத்தும் பெண்ணொருவரிடம் தனது சீருடையை தைக்க கொடுத்துள்ளார்.

தைத்த தந்து சீருடையை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை எடுக்க சென்ற வேளை , தையலகத்தினுள் வைத்து , அப்பெண்ணுடன் தகாத முறையில் நடக்க முற்பட்டுள்ளார்.

அத்துடன் , தையலகத்திற்கு வந்த மேலும் இரு பெண்களுடனும் தவறாக நடந்து கொண்டுள்ளார்.

இது குறித்து , தையலக பெண் , தனது கணவருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்ததை அடுத்து , தையலகத்திற்கு , சில இளைஞர்களுடன் விரைந்த கணவன் , தகாத முறையில் நடக்க முற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை மடக்கி பிடித்து , பொலிஸ் நிலையத்தில் கையளித்துள்ளனர்.

குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மது போதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் நிலையத்தில் கையளிக்கப்பட்ட நிலையிலும் குறித்த போலீஸ் உத்தியோகஸ்தர் , பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருடனும் ஏனைய இளைஞர்களுடனும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்பாக முரண்பட்டு , தாக்குதல் நடத்தவும் முற்பட்டுள்ளார்.

அதேவேளை , பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , பாதிக்கப்பட்டவர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டமையால் , சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் . பிராந்திய இணைப்பாளர் த கனகராஜிடம் பாதிக்கப்பட்ட தரப்பினர் தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்தததை அடுத்து , அவர் , பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டு , பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாட்டை ஏற்று , சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளார்.

அதனை அடுத்து பொறுப்பதிகாரி முறைப்பாட்டை ஏற்றதை அடுத்து, சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.