பிரித்தானிய ராணுவத்தில் 13,522 பேர் மருத்துவ ரீதியாக பணிக்கு தகுதியற்றவர்கள்! வெளியான அதிர்ச்சி அறிக்கை
பிரித்தானிய ராணுவத்தில் பணிபுரியும் குறிப்பிடத்தக்க அளவு பணியாளர்கள் பணிக்கு மருத்துவ அளவில் தகுதியற்றவர்கள் என வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
13,000 பேர் பணிக்கு தகுதியற்றவர்கள்
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் (MoD) புதிய புள்ளிவிவரங்கள், பிரித்தானிய ராணுவத்தில் 13,000-க்கும் மேற்பட்டோர் தற்போது போர்க்கால பணிகளுக்கு மருத்துவ ரீதியாக தகுதியற்றவர்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளன.
ராணுவ அமைச்சரும்(Veterans Minister) ரிசர்வ் படையினருமான(reservist) ஆல் கார்ன்ஸ் (Al Carns) பகிர்ந்துள்ள தரவுகளின் படி, 99,560 பணியாளர்கள் முழுமையாக மருத்துவ ரீதியாக பணிக்கு தகுதியானவர்கள் என்றாலும், 14,350 பேருக்கு பணி வரம்புகள்(குறிப்பிட்ட அளவு மருத்துவ தகுதி கொண்டவர்கள்) உள்ளன என்பதைக் குறிக்கின்றன.
அத்துடன் குறிப்பிடத்தக்க வகையில், 13,522 பணியாளர்கள் மருத்துவ ரீதியாக பணிக்கு தகுதியற்றவர்கள் என கருதப்படுகின்றனர்.
மேல் குறிப்பிட்டுள்ள படி, ராயல் கடற்படையில், 2,922 பணியாளர்கள் மருத்துவ ரீதியாக பணிக்கு தகுதியற்றவர்கள் ஆவார்கள், இதே போல ராணுவத்தில் 6,879 பணியாளர்கள் மருத்துவ ரீதியாக பணிக்கு தகுதியற்றவர்கள் என்றும், ராயல் விமானப்படையில் 3,721 பணியாளர்கள் மருத்துவ ரீதியாக பணிக்கு தகுதியற்றவர்கள் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.
மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படும் பணியாளர்கள்
எந்தவிதமான பணி வரம்புகளும் இல்லாமல் பணிக்கு மருத்துவ ரீதியாக தகுதியானவர்கள் முழுமையாக பணிக்கு தகுதியானவர்கள் என MoD வரையறுக்கிறது.
மாறாக, “மருத்துவ ரீதியாக பணிக்கு தகுதியற்றவர்கள்” என வகைப்படுத்தப்பட்ட பணியாளர்கள் குறிப்பிடத்தக்க பணி வரம்புகளை எதிர்கொள்கின்றனர்.
அவர்கள் பிரித்தானியாவின் குறிப்பிடத்தக்க பயிற்சியில் பங்கேற்கலாம்.
இருப்பினும் தங்கள் பணிகளை நிறைவேற்றும் திறனை பாதிக்கும் மருத்துவ நிலைமைகள் அல்லது உடற்தகுதி பிரச்சினைகள் உள்ள பணியாளர்கள் மருத்துவ குழு மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படுவார்கள்.
மதிப்பீட்டை தொடர்ந்து, சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் மறுவாழ்வை எளிதாக்க பணியாளர்கள் தரம் குறைக்கப்படலாம்.
அத்துடன் தற்காலிக அல்லது நிரந்தர அடிப்படையில் பணிக்கு தகுதியான நிலை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.