;
Athirady Tamil News

பிரித்தானியாவில் சாலையில் பலியான 51 வயது பெண்மணி: அடுத்தடுத்து இளைஞர்கள் பலர் கைது

0

பிரித்தானியாவில் நடந்த சாலை விபத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாலை விபத்தில் பெண் பலி
கடந்த டிசம்பர் 15ம் திகதி இரவு 8.30 மணியளவில் நெல்சன்(Nelson), லங்காஷயரில்(Lancashire) உள்ள மான்செஸ்டர் சாலையில்(Manchester Road) 51 வயதான சஃபியா கரீம்(Safia Karieem) என்ற பெண் சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இதையடுத்து ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது மற்றும் முறையான சாரதி தகுதியின்றி வாகனம் ஓட்டியது ஆகிய குற்றச்சாட்டின் பெயரில் நெல்சன், ஃபாரர் தெருவைச்(Farrer Street, Nelson) சேர்ந்த 19 வயதான அபுபக்கர் மஹ்முத் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

அவர் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 20 திகதி பர்ன்லி கிரவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

அடுத்தடுத்து பலர் கைது
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் பலர் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, ஆபத்தான வாகன ஓட்டுதல் குற்றச்சாட்டின் பேரில் மூன்று 19 வயது இளைஞர்கள், 20 வயது பெண் மற்றும் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டனர்.

அதே சமயம் 30 வயது நபர் குற்றவாளிக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

ஆனால் அனைத்து நபர்களும் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், லங்காஷயர் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான தகவல் அல்லது டாஷ் கேம் காட்சிகள் ஏதேனும் இருந்தால், அவற்றை தெரிவிக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.