2024ஆம் ஆண்டு முடிவடையப்போகிறது… பாபா வங்காவின் கணிப்புகளில் எவையெல்லாம் பலித்துள்ளன?
1996இல் இறந்துபோனாலும், 5079ஆம் ஆண்டு வரையுள்ள விடயங்களை முன்பே கணித்துக் கூறியுள்ளார் வங்கா பாபா.
பல்கேரிய தீர்க்கதரிசி என கருதப்படும் பாபா வங்காவின் கணிப்புகளைப் பின்பற்றுவோர் பலர் இருக்கிறார்கள்.
அவ்வகையில், 2024ஆம் ஆண்டைக் குறித்தும் பாபா பல விடயங்களைக் கணித்திருந்தார்.
அவற்றில் எவையெல்லாம் பலித்துள்ளன, எவையெல்லாம் பொய்த்தன என்று பார்க்கலாம்!
2024ஆம் ஆண்டைக்குறித்த பாபா வங்காவின் கணிப்புகள்
2024ஆம் ஆண்டைக் குறித்து பாபா கணித்த விடயங்களில் முக்கியமானது, உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்பது.
பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட பதற்றத்தை நாம் அனைவருமே உணர்ந்தோம் என்பதை மறுக்கமுடியாது.
பிரித்தானியாவைப் பொருத்தவரை இந்த ஆண்டில் பொருளாதாரம் சற்றே வளர்ச்சியடைந்துள்ளது என்றாலும், தொடர்ந்து உணவு வங்கிகளை நாடும் நிலையில் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
உலகம் முழுவதுமே ஒரு நிலையற்ற தன்மை நிலவுகிறது. பில்லியன் கணக்கான மக்கள் பணவீக்கத்தின் நடுவே பொருளாதார ரீதியிலும், வேலையிழப்பினாலும் அவதியுற்று வருகிறார்கள்.
அப்படியானால், பொருளாதார விடயத்தில், பாபாவின் கணிப்பு பலித்துள்ளது என்றே கூறலாம்.
2024ஆம் ஆண்டைக்குறித்த பாபாவின் கணிப்புகளில் மற்றொன்று, பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நெருக்கடி நிலையைக் குறித்ததாகும்.
அவர் கூறியதைப்போலவே, உலகம் வரலாறு காணாத அளவில் வெப்பமடைதலை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது.
பருவநிலை மாற்றத்தின் விளைவாக, பல்வேறு அசாதாரண நிகழ்வுகளை உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. பாலைவன நாடுகளில் பனிப் பொழிகிறது. பிரான்ஸ் போன்ற நாடுகளில் பனியைக் காணவில்லை!
சமீபத்தில், ஸ்பெயினிலுள்ள Valenciaவில் பெருமழை பெய்து இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவில் பெருவெள்ளம் ஏற்பட்டதை உலகமே பார்த்தது.
அதேபோல, போலந்து, ஆஸ்திரியா, ரொமேனியா, ஹங்கேரி, ஜேர்மனி மற்றும் ஸ்லோவேகியா ஆகிய நாடுகளும் வரலாறு காணாத அளவில் மழையை எதிர்கொண்டன.
பாபா மிக துல்லியமாக கணித்த மற்றொரு கணிப்பு, உலகில் புற்றுநோய் மற்றும் அல்ஸீமர் பிரச்சினைகள் தொடர்பில் மருத்துவ உலகில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும் என்பதாகும்.
2024ஆம் ஆண்டில், 18 வயதுக்குக் கீழுள்ளவர்களில் புற்றுநோயைக் கண்டறிய பரிசோதனை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள். மேலும், கருப்பை வாய் புற்றுநோய்க்கான சிகிச்சையிலும், அல்ஸீமர் பிரச்சினைக்கான சிகிச்சை முறையிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
பலிக்காத கணிப்புகள்
2024ஆம் ஆண்டுக்கான பாபாவின் கணிப்புகளில் பலிக்காத ஒன்றும் உள்ளது.
ஆம், வல்லரசு ஒன்று, உயிரி ஆயுதங்களைப் பயன்படுத்தும் என கணித்திருந்தார் பாபா. இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை.
என்றாலும், ரஷ்யாவும் உக்ரைனும் இன்னமும் மோதிக்கொண்டிருக்கும் நிலையில், அப்படி ஒரு விடயம் நடக்காது என்றே நம்புவோம்.