83 மில்லியன் பிரியாணி ஆர்டர்.., Swiggy வெளியிட்ட ஆண்டிறுதி அறிக்கை
Swiggy 2024 ஆம் ஆண்டிற்கான அதன் வருடாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் பல்வேறு உணவுப் போக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பிரியாணி ஆர்டர் அதிகமாக செய்யப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் 83 மில்லியன் பிரியாணி ஆர்டர்களை Swiggy பதிவு செய்துள்ளது. அதாவது, நாட்டில் ஒரு நிமிடத்திற்கு 158 பிரியாணி ஆர்டர்கள் ஆர்டர் செய்யப்பட்டன (ஒவ்வொரு வினாடிக்கும் தோராயமாக 2 ஆர்டர்கள்).
பிரியாணிக்குப் பிறகு, இந்த ஆண்டு 23 மில்லியன் ஆர்டர்களை தேசை பதிவு செய்துள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புள்ளிவிவரங்களும் ஜனவரி 1, 2024 மற்றும் நவம்பர் 22, 2024 இற்கு இடையில் சேகரிக்கப்பட்ட தரவை அடிப்படையாகக் கொண்டவையாகும்.
அறிக்கைகளின்படி சிக்கன் பிரியாணி இந்த உணவின் மிகவும் விருப்பமானதாக கருதப்படுகிறது. Swiggy இந்த ஆண்டு 49 மில்லியன் ஆர்டர்களைப் பெற்றுள்ளது.
Swiggy ஆர்டர்களில் பெரும்பகுதி தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்களால் வழங்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் 9.7 மில்லியன் பிரியாணி ஆர்டர்களுடன், ஹைதராபாத் முதலிடத்தில் உள்ளது.
இதைத் தொடர்ந்து பெங்களூரு (7.7 மில்லியன் ஆர்டர்கள்) மற்றும் சென்னை (4.6 மில்லியன்) உள்ளன.
நள்ளிரவு 12 முதல் 2 மணி வரை பசியைப் போக்க பிரியாணி ஆர்டர் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் இடத்தில் சிக்கன் பர்கர் இருந்தது. ரயில்களில் அதிகம் ஆர்டர் செய்யப்படும் உணவுகளில் பிரியாணியும் ஒன்று.