அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் தீர்மானம்
இந்த வாரம் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுடன் நேற்று (24.12.2024) கலந்துரையாடிய நிலையில், அத்தியாவசியப் பொருட்களை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சந்தையில் டின் மீனின் விலை தற்போது 425-490 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. எனினும் அதனை உள்ளூர் உற்பத்தியாளர்கள் 300 ரூபா என தெரிவிப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்டுப்பாட்டு விலை
இதன்படி இந்த வாரம் டின் மீன்கள் உள்ளிட்ட சில பொருட்களுன கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், எதிர்வரும் 10ஆம் திகதி வரை அரிசியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.