போர் கொடூரங்களில் தப்பிய இரட்டை சகோதரிகள்..13 ஆண்டுகளுக்கு பின் அவுஸ்திரேலியாவில் மகனுடன் இணைந்த தாய்
சிரியாவில் இருந்து தப்பிய இரட்டை சகோதரிகள் அவுஸ்திரேலியாவில் முதல் முறையாக கிறிஸ்துமஸை கொண்டாடுகின்றனர்.
சிரியாவில் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒரு தசாப்தமாக வெளியேறினர்.
அவர்களில் நெவார்ட், சில்வா என்ற இரட்டை சகோதரிகளும் அடங்குவர். இவர்கள் கடந்த டிசம்பரில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தனர்.
சில மாதங்கள் குடும்பத்துடன் தங்கி, இருவரும் பொருத்தமான வாடகை வீட்டைத் தேடி இறுதியாக கிறிஸ்துமஸிற்காக ஒரே கூரையின் கீழ் கூடியுள்ளனர்.
மகனுடன் மீண்டும் இணைந்த தாய்
13 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த நெவார்ட்டின் மகனுடன் தங்கள் முதல் விருந்தை சகோதரிகள் இணைந்து கொண்டாடுகின்றனர்.
நெவார்ட் கூறும்போது, 13 ஆண்டுகளுக்குப் பிறகு எனது ஒரே மகனுடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.