இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் ஈவ்வில் இருவருக்கு நேர்ந்த துயரம்
இங்கிலாந்தில் லொறி சாரதிகள் இருவர் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திலேயே மரணம்
Lincolnshireயில் காலை 9.33 மணியளவில், Volvo மற்றும் Scania என்ற இரண்டு லொறிகள் Snitterby சந்திப்பில் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் 51 வயதுடைய இரண்டு லொறி சாரதிகளுமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கூறுகையில், உயிரிழந்த சாரதிகளில் ஒருவர் Barnsley பகுதியைச் சேர்ந்தவர், மற்றொரு நபர் Cleethorpes பகுதியைச் சேர்ந்தவர் ஆவர் என்றனர்.
எந்த காரும் இதில் சிக்கவில்லை
முதலில் இச்சம்பவத்தில் இரண்டு லொறிகள், ஒரு கார் சம்பந்தப்பட்டதாக பொலிஸார் கருதினர். ஆனால், எந்த காரும் இதில் சிக்கவில்லை என்பதை பின்னர் உறுதி செய்தனர்.
மேலும், இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது டாஷ்கேம் காட்சிகளை வைத்திருப்பவர்கள் யாரேனும் முன் வந்து பேசும்படி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் ஈவ்வில் லொறி சாரதிகள் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.