தீப்பிடித்து விழுந்த 67 பேருடன் ரஷ்யாவுக்கு கிளம்பிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி என்ன?
ரஷ்யாவிற்கு சென்றுகொண்டிருந்த அஜர்பைஜான் விமானம் கஜகஸ்தானில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் இருந்து ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, 67 பேருடன் ரஷ்யாவின் செச்சினியாவில் உள்ள Grozny நோக்கி சென்று கொண்டிருந்தது.
ஆனால், பனிமூட்டம் காரணமாக விமானம் திருப்பி விடப்பட்டது. கஜகஸ்தானின் அக்டாவ் நகருக்கு அருகே விமானம் சென்றபோது விபத்திற்குள்ளானது.
தீப்பிடித்து எரிந்த விமானம்
குறித்த விமானம் விரைவாக உயரத்தை இழந்து, திறந்தவெளியில் தீப்பிடித்து எரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பலமுறை வட்டமடித்த விமானம் அவசர தரையிறக்கத்தின்போது விபத்திற்குள்ளானது. மேலும், விமான நிலையத்திற்கு அருகே இந்த விபத்து நடந்தது.
முதற்கட்டமாக விமானத்தில் இருந்தவர்களில் 10க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.