பிரித்தானியாவில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூடு: கத்தியுடன் இருந்த நபர் உயிரிழப்பு
பிரித்தானியாவின் ரெட்டிச்சில் நடந்த வன்முறை சம்பவத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் ஆண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
காவல்துறை நடத்திய துப்பாக்கி சூடு
பிரித்தானியாவின் ரெட்டிச்சில்(Redditch) கிறிஸ்துமஸ் இரவில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் கத்தியுடன் இருந்த நபர் கொல்லப்பட்டார்.
செவ்வாய்க்கிழமை மாலை 2 மணியளவில் ஃபோன்ஹோப் குளோஸில்(Fownhope Close) உள்ள ஒரு வீட்டிற்கு மேற்கு மெர்சியா பொலிஸார் அழைக்கப்பட்டனர்.
சம்பவ இடத்தில் நபர் ஒருவர் கத்தியுடன் இருப்பதாக தகவல் வந்ததை அடுத்து காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பேச்சுவார்த்தை நீண்ட நேரம் நடந்த பிறகும், மாலை 7:40 மணி அளவில், ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் கத்தி வைத்து இருந்த நபர் சுடப்பட்டதோடு, மாலை 8 மணிக்கு பிறகு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
சம்பவம் நடைபெற்ற போது வீட்டுக்குள் வேறு யாரும் இல்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
திட்டமிட்ட நடைமுறையின்படி, பொலிஸ் நடத்தைக்கான சுயாதீன அலுவலகம் (IOPC) க்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது மற்றும் துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.