அண்ணா பல்கலைகழகத்தில் அதிர்ச்சி – காதலன் கண்முன்னே மாணவிக்கு பாலியல் வன்கொடுமை
அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைகழகம்
சென்னையில் கிண்டியில் தமிழ்நாடு அரசின் மாநில பல்கலைகழகமான அண்ணா பல்கலைகழகம் செயல்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைகழகம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளையும் கட்டுப்படுத்துகிறது.
இங்கு கன்னியாகுமரியை சேர்ந்த மாணவி ஒருவர் மெக்கானிக்கல் துறையில் 2ஆம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் அதே பல்கலைகழகத்தில் 3ஆம் ஆண்டு படித்து வரும் மாணவன் ஒருவருடன் காதலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
பாலியல் வன்கொடுமை
இந்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இருவரும் இரவு உணவு அருந்தி விட்டு தனிமையில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர் அந்த பெண்ணின் காதலனை தாக்கி விட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அந்த பெண் இது தொடர்பாக கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இக்குற்ற செயலில் ஈடுபட்டது மாணவர்களோ? வெளிநபர்களா? என விசாரிக்கப்படுகிறது.
பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் முக்கிய பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.