கட்டுநாயக்காவில் விமான நிலையத்தில் கொழும்பை சேர்ந்த நபர் அதிரடி கைது!
சட்டவிரோதமான முறையில் “குஷ்” போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வந்த பயணி ஒருவரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையின் போது சுமார் 4 கோடியே 38 இலட்சத்து 80 ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவத்தில் கொழும்பில் வசிக்கும் 30 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (24-12-2024) பிற்பகல் தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை இவர் வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த பயணப் பொதியில் 04 கிலோ 388 கிராம் “குஷ்” என்ற போதைப்பொருள் தொகையை 05 பொதிகளில் மறைத்து வைத்திருந்த நிலையில் குறித்த நபரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைப்பற்றப்பட்ட “குஷ்” என்ற போதைப்பொருளை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.