தேசிய பாதுகாப்பு தினமும் சுனாமி ஆழிப்பேரலையின் 20 வது ஆண்டு நினைவு தினமும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அனுஷ்டிப்பு
தேசிய பாதுகாப்பு தினமும் சுனாமி ஆழிப்பேரலையின் 20 வது ஆண்டு நினைவு தினமும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அனுஷ்டிப்பு
சுனாமி ஆழிப்பேரலையின் 20 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
தேசியக்கொடி கொடி ஏற்றலுடன் சுனாமி மற்றும் ஏனைய அனர்த்தங்களால் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ச.சிறீபவானந்தராஜா, இ.அர்ச்சுனா உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்-முரளிதரன் ,வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள்,மாவட்டச்செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், திணைக்களங்களின் அரச அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.