கைது செய்யும் முயற்சியில் துப்பாக்கிச் சண்டை! 14 பாதுகாப்புப் படை வீரர்கள், 3 போராளிகள் மரணம்
சிரியாவில் போராளிகள் பாதுகாப்புப் படையினர் இடையே நடந்த சண்டையில் பலர் கொல்லப்பட்டனர்.
கவிழ்ந்த அரசு
கடந்த 8ஆம் திகதி சிரியாவில் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி பஷிர் அல் அசாத் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
அதன் பின்னர் அபு முகமது அல் ஜவ்லானி தலைமையிலான ஹயத் தஹிர் அல் ஷம் எனும் கிளர்ச்சிக்குழு சிரியாவில் ஆட்சியை கைப்பற்றியது.
இந்த நிலையில், முன்னாள் ஆட்சி அதிகாரியான முகமது கன்ஜோ ஹசனை கைது செய்ய, கிர்பெத் அல்-மாஸா பகுதியில் பாதுகாப்புப் படையின் ரோந்து குழு முயன்றுள்ளது.
துப்பாக்கிச்சூடு
அப்போது பாதுகாப்புப் படையினரை நோக்கி ஹசனின் ஆதரவாளர்கள் மற்றும் உள்ளூர் போராளிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இதனால் அவர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்புப்படையினர் 14 பேரும், போராளிகள் 3 பேரும் கொல்லப்பட்டனர்.
மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் சிரியாவின் மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.