;
Athirady Tamil News

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!

0

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

மன்மோகன் சிங் மறைவு
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி காலமானார்.

92 வயதுடைய மன்மோகன் சிங் வயது மூப்பு தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில் வியாழக்கிழமை (டிச.26) இரவு 8.06 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங் இரவு 9.51 மணிக்கு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

அவருக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் பல அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

10 ஆண்டுகால பிரதமர்
மன்மோகன் சிங் 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை இந்தியாவின் பிரதமராக சேவையாற்றினார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ராஜ்யசபாவில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்தியாவின் ஒரே ஒரு சிக்கிய பிரதமராக செயல்பட்ட மன்மோகன் சிங், 1991ம் ஆண்டு நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.