நான்கு நாள் காய்ச்சல் இளம் குடும்பஸ்தர் யாழில் மரணம்
நான்கு நாள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கைதடி மேற்கைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நவரத்தினம் தனுசன் (வயது-34) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.
கடந்த 23ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மறுநாள் 24ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இம் மரணம் தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டார்.