கடும் சளி, காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் மூன்று மாத ஆண் குழந்தை மரணம்!
கடும் சளி, காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் மூன்று மாத ஆண் குழந்தை ஒன்று நேற்று மரணமடைந்துள்ளது.
தெல்லிப்பழை பன்னாலைப் பகுதியைச் சேர்ந்த பங்கஜன் ஸ்ரீதிகன் என்ற ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தை க்கு கடந்த 24ஆம் திகதி கடும் சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது இருப்பினும் நேற்று முன்தினம்(25) குழந்தை சுவாசிக்க சிரமப்பட்டதன் காரணத்தினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில்
குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
குழந்தையின் மரண விசாரணைகளை யாழ் மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.