;
Athirady Tamil News

வடகொரிய வீரரை போர்க்கைதியாக சிறைபிடித்துள்ள உக்ரைன்., தென்கொரியா உறுதி

0

உக்ரைன் படைகள் ரஷ்யாவுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்ட வடகொரிய வீரரை கைதுசெய்துள்ளன.

இந்த தகவலை தென்கொரியாவின் உளவுத்துறை வெள்ளிக்கிழமை உறுதி செய்துள்ளது.

காயமடைந்த நிலையில் கைதான இவ்வீரர், 2022 டிசம்பருக்கு பின் கைதான முதல் வடகொரிய போர்கைதி என்று கூறப்படுகிறது. இதற்கான புகைப்படம் டெலிகிராமில் பரவியது.

உக்ரைன் மற்றும் தென்கொரியாவின் தகவல்படி, உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக 10,000-க்கும் மேற்பட்ட வடகொரிய வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். எனினும், இதை ரஷ்யா மற்றும் வடகொரியா உறுதி செய்யவில்லை.

“வடகொரிய வீரர்களை கைதுசெய்து, உக்ரைன் போர்கைதிகளை ரஷ்யாவுடன் பரிமாறுவது உக்ரைனுக்குப் பயனுள்ளதாக இருக்கும். இது தொடக்க மட்டுமே” என அசான் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சி நடத்தை நிபுணர் யாங் உக் கூறியுள்ளார்.

வடகொரிய வீரர்களுக்கு பொய்யான ரஷ்ய அடையாளங்கள் வழங்கப்பட்டுள்ளதாக உக்ரைன் கூறுகிறது.

7000 ஆண்டுகள் பழமையான அதிசய சிற்பம்: குவைத்தில் அகழாய்வு மூலம் வெளிச்சம்
7000 ஆண்டுகள் பழமையான அதிசய சிற்பம்: குவைத்தில் அகழாய்வு மூலம் வெளிச்சம்
அதேசமயம், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளியிட்ட வீடியோவில், வடகொரிய வீரர்களின் சடலங்களை ரஷ்ய வீரர்கள் அடையாளமறிய எரிக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

வடகொரியாவின் சிறந்த படை எனக் கருதப்படும் 11வது படைத்தொகுதியிலிருந்து (Storm Corps) வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக உக்ரைன் மற்றும் தென்கொரிய உளவுத்துறைகள் தெரிவித்துள்ளன.

இதுவரை, ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் 3,000-க்கும் மேற்பட்ட வடகொரிய வீரர்கள் உயிரிழந்ததாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.