;
Athirady Tamil News

வவுனியாவில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட இருவர் துப்பாக்கியுடன் கைது

0

வவுனியாவில் 50க்கு மேற்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் உட்பட இருவர் துப்பாக்கியுடன் கைது

வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் முன்னெடுத்த விசேட நடவடிக்கையில் 50க்கு மேற்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் உட்பட இருவரை உள்நாட்டு துப்பாக்கி மற்றும் திருட்டு சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படும் என சந்தேகிக்கப்படும் இரு இயந்திரங்களுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா நகர் , பூவரசங்குளம் , நெடுங்கேனி , ஒமந்தை , கனகராயன்குளம் என வவுனியா மாவட்டத்தின் பல பொலிஸ் பிரிவுகளிலும் ஏனைய மாவட்டங்களிலும் கத்தி முனைகளில் வீடுகளில் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபடுவது என 50க்கு மேற்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் தொடர்பில் வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சமந்த விஜசேகர அவர்களின் ஆலோசனையில் , வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மலன் பெரேரா அவர்களின் வழிநடத்தலில், வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி அழகியவண்ண தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் சாரங்க ராஜகுரு, பொலிஸ் சார்ஜன்ட்டுகளான திசாநாயக்க (37348), ரன்வெல (61518), பொலிஸ் கொன்தாபிள்களான சிந்தக (78448), விதுசன் (91800), சாரதியான திஸதாநாயக்க (18129) ஆகியோர் தலைமையிலான பொலிசார் விசேட நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பிரதான நபர் வீட்டில் தங்குவது இல்லை என்பதுடன் வனப்பகுதிகளிலேயே தங்குவது வழமையாக கொண்டு வந்துள்ளனர். இந்நிலையிலேயே வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாரின் விசேட நடவடிக்கையில் 43வயதுடைய குறித்த நபரை உள்நாட்டு துப்பாக்கி மற்றும் திருட்டு சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படும் என சந்தேகிக்கப்படும் இரு இயந்திரங்களுடன் கைது செய்துள்ளமையுடன் அவருக்கு உதவியாக செயற்பட்டார் என சந்தேகிக்கப்படும் 30 வயதுடைய நபர் ஒருவரும் என இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பிரதான நபருக்கு எதிராக நீதிமன்றில் நான்கு திறந்த பிடியானை மற்றும் ஆறு திகதியிடப்பட்ட பிடியானை என்பன இருப்பதுடன் அவர்களிடம் முன்னெடுக்கப்படுகின்ற மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கைளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.