;
Athirady Tamil News

இலங்கை இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பில் தனிப்பட்ட முறையில் இந்திய அரசாங்கத்துடன் பேசுவேன் – பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா

0

இலங்கை இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பில் தனிப்பட்ட முறையில் இந்திய அரசாங்கத்துடன் பேசுவேன் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இது தொடர்பில் திட்டமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.

யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர்களின் சம்மேளனப் பிரதிநிதிகளை இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழரின் அரசியலில் இந்தியா இன்று நேற்று அல்ல. 1970, 60களில் இருந்தே முக்கிய காரணியாக இருந்திருக்கின்றது. பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை என்று பேச்சுவார்த்தை நடத்தி எந்த முடிவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்
பாராளுமன்ற உறுப்பினராக
இது சம்பந்தமாக பாராளுமன்றத்தில் அமைச்சருக்கு மேலதிகமாக கட்டாயமாக நான் பேசுவேன். சட்டங்களை இயற்றக்கூடிய பெரும்பான்மை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உள்ளது.

எங்களது கடல் எல்லைகளை பாதுகாப்பது தொடர்பான சட்டங்களை உருவாக்குவதற்கான வலு தேசிய மக்கள் சக்தியிடம் இருக்கின்றது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இலங்கை இருப்பதன் காரணமாக இந்த விடயம் அரசியலுக்கு அப்பால் மக்கள் நலன் சார்ந்து போகுமா என்பது கேள்விக்குறி. ஆனால்

யாழ்ப்பாண மீனவர்களை பொறுத்த வரைக்கும் இது ஒரு வாழ்வாதார பிரச்சனை. இந்திய அரசாங்கத்துடன் தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் நான் கருத்துக்களை முன்வைப்பேன்.
இது தொடர்பில் திட்டமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

யாழ்ப்பாண மாவட்ட மக்கள் மூன்று தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்துள்ளதுடன் கடற்றொழில் மற்றும் மீன்பிடி அமைச்சரும் எம்மக்களின் வாக்குகள் மூலமே தேசியப்பட்டியல் மூலம் பாரளுமன்றம் சென்றவர்.

எனவே இப் பிரச்சனையை உனடியாக தீர்க்கவேண்டிய பொறுப்பு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உள்ளது – என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.