சீனாவில் கொத்தாக 35 பேர்கள் கொல்லப்பட்ட சம்பவம்… குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனை
சீனாவில் விவாகரத்து தொடர்பான விவகாரத்தில் பொதுமக்கள் 35 பேர்களை வாகனத்தால் மோதி கொலை செய்த 62 வயதான நபருக்கு நீதிமன்றம் தண்டனை அறிவித்துள்ளது.
குற்றத்தை ஒப்புக்கொண்டதாக
சீனா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்புடைய Fan Weiqiu என்ற நபருக்கு தற்போது மரண தனடனை விதிக்கப்பட்டுள்ளது. தெற்கு நகரமான ஜுஹாய் பகுதியில் அமைந்துள்ள நீதிமன்றமானது வெள்ளிக்கிழமை தண்டனையை வழங்கியது.
தாக்குதலின் போது பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒரு விளையாட்டு மையத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அபாயகரமான வழிகளில் பொதுப் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக Fan Weiqiu குற்றத்தை ஒப்புக்கொண்டதாக நீதிமன்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, அவரது குற்றவியல் நோக்கம் மிகவும் வெறுக்கத்தக்கது, குற்றத்தின் தன்மை மிகவும் மோசமானது, குற்றத்தின் வழிமுறைகள் குறிப்பாக கொடூரமானவை, மேலும் குற்றத்தின் விளைவுகள் கடுமையானவை, இதன் விளைவாக பெரும் சமூக தீங்கு விளைவிக்கப்பட்டுள்ளது என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, இது போன்று எதிர்காலத்தில் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி ஜி ஜின்பிங் உள்ளூர் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
சில வாரங்களிலேயே
பொதுவாக சீனாவில் நீதிமன்ற வழக்குகள் துரிதமாக விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும். ஆனால் Fan Weiqiu வழக்கானது தாக்குதல் நடந்து சில வாரங்களிலேயே விசாரணை முடிக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
Zhuhai தாக்குதல் சம்பவம் குறித்து 24 மணி நேரம் வரையில் தகவல் எதையும் வெளியிட அதிகாரிகள் மறுத்துள்ளனர். சம்பவம் நடந்து ஒரு நாளுக்கு பின்னரே, 35 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதும் 43 பேர்கள் காயமடைந்துள்ளதையும் பொலிசார் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
62 வயதான Fan Weiqiu தாக்குதலை அடுத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.