ஜேர்மன் நாடாளுமன்றம் கலைப்பு: தேர்தல் திகதியை உறுதி செய்தார் ஜனாதிபதி
ஜேர்மன் ஜனாதிபதி ஜேர்மன் நாடாளுமன்றத்தைக் கலைத்ததுடன், தேர்தல் திகதியையும் உறுதி செய்துள்ளார்.
ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, ஜேர்மன் நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார் ஜேர்மன் ஜனாதிபதியான ஃப்ராங்க் வால்ட்டர் ஸ்டெய்ன்மெயர்.
அத்துடன், பிப்ரவரி மாதம் 23ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்பதையும் உறுதி செய்துள்ளார் அவர்.
ஜேர்மனியில் அடுத்த ஆட்சி அமையும்வரை, முந்தைய சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் காபந்து சேன்ஸலராக நீடிப்பார்.