இஸ்ரேலிய பிரதமருக்கு புரோஸ்டேட் அறுவை சிகிச்சை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நெதன்யாகு
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறுவை சிகிச்சைக்காக ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனைக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
75 வயதான இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த ஆண்டின் தொடக்கத்தில் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு அவருக்கு பேஸ்மேக்கர் பொருத்துவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு-க்கு புரோஸ்டேட் அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.
புரோஸ்டேட் விரிவாக்கத்தின் விளையாக அவருக்கு சமீபத்தில் சிறுநீர் பாதை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
14 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் ஹமாஸ் இஸ்ரேல் போருக்கு மத்தியில் இந்த அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது.