179 பேர் பலியானது உறுதி! இருவர் மட்டுமே உயிர்பிழைப்பு..மூன்று தசாப்தங்களில் மோசமான விமான விபத்து
தென்கொரியாவில் நடந்த மிக மோசமான விமான விபத்தில் 179 பேர் கொல்லப்பட்டனர்.
தென் கொரியாவில் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஒன்று விபத்திற்குள்ளானது.
முதலில் 85 பேர் பலியானதாக தகவல் வெளியானது. ஆனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் விமான விபத்தில் 179 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும், இருவர் மட்டுமே இந்த விபத்தில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தென்கொரிய மண்ணில் ஏறக்குறைய மூன்று தசாப்தங்களில் நடந்த மிக மோசமான விமான விபத்து இது என்று போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.