;
Athirady Tamil News

பிரித்தானியாவில் 48 மணி நேரம் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்ட மக்கள்

0

பிரித்தானியாவில் தற்போது ஆபத்தான தொற்று நோய் பரவி வருவதை அடுத்து 48 மணி நேரம் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வைரஸ் பரவக்கூடும்
நோரோவைரஸ் மிகவும் தொற்றக்கூடிய கிருமி, ஆனால் குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப்பட்டால் உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாக்க வழிகள் உள்ளதாக NHS உறுதி அளித்துள்ளது.

இருப்பினும், பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு, அசுத்தமான பகுதி அல்லது பொருட்களைத் தொட்டு, பின்னர் உங்கள் வாயைத் தொடுவதன் மூலம் வைரஸ் பரவக்கூடும் என்றும் NHS எச்சரித்துள்ளது.

மட்டுமின்றி, நோய்வாய்ப்பட்ட ஒருவரால் தயாரிக்கப்பட்ட அல்லது கையாளப்படும் உணவும் வைரஸின் மையமாக மாறக்கூடும். இதில், ஆல்கஹால் ஹேண்ட் ஜெல் நோரோவைரஸ் பாக்டீரியாவைக் கொல்லாது என்பது கவனிக்கத்தக்கது.

இருப்பினும், அதை எதிர்த்துப் போராட சில தந்திரங்கள் உள்ளதாக குறிப்பிடுகின்றனர். நோரோவைரஸ் பாதிக்கப்பட்டுள்ள ஒருவரிடமிருந்து வாந்தி அல்லது வயிற்றுப்போக்கால் மாசுபடுத்தப்பட்ட துணி அல்லது மேற்பரப்புகளை தவிர்ப்பது.

ப்ளீச் அடிப்படையிலான துப்புரவுப் பொருளைக் கொண்டு இதேபோல் மாசுபடுத்தப்பட்ட எந்தப் பரப்புகளையும் கிருமி நீக்கம் செய்வது. செல்லப்பிராணிகளைக் கொண்ட குடும்பங்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

மூன்று நாட்களுக்குள்
சோப்பு மற்றும் தண்ணீருடன் தொடர்ந்து கைகளை கழுவுவது வைரஸ் பரவுவதை தடுக்க உதவும். மேலும், உடல்நிலை சரியில்லாத எவரும், குறைந்தபட்சம் 48 மணிநேரங்களுக்கு அறிகுறியற்றவர்களாக இருக்கும் வரை, சமையலறை அல்லது குடும்பத்தினரால் பகிர்ந்து கொள்ளப்படும் எந்தவொரு உணவையும் தவிர்க்க வேண்டும்.

வாந்தியெடுத்தல் கிருமியால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது இரண்டு நாட்களுக்கு அறிகுறியற்றவர்களாக இருக்கும் வரை வேலை அல்லது பள்ளியிலிருந்து விலகி இருக்குமாறு கூறப்படுகிறார்கள்.

மட்டுமின்றி மருத்துவமனைகள் காப்பகங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். நோரோவைரஸை பொதுவாக வீட்டிலேயே குணப்படுத்த முடியும்.

பாதிக்கப்பட்ட நபர் நிறைய ஓய்வெடுப்பதை உறுதிசெய்து, நீரிழப்பைத் தடுக்க முயற்சிகள் முன்னெடுக்க வேண்டும். அறிகுறிகள் பொதுவாக இரண்டு முதல் மூன்று நாட்களுக்குள் மேம்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.