புதிய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரீகோ!
இராணுவத்தின் பிரதி பிரதானியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரீகோ புதிய இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இலங்கை இராணுவத்தின் 25 ஆவது இராணுவத் தளபதி ஆவார்.
இராணுவத் தளபதி விக்கும் லியனகே மேலும் சேவை நீடிப்பு இன்றி ஓய்வுபெறும் தீர்மானத்துடன் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார மற்றும் கஜபா படைப்பிரிவின் மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க ஆகியோர் இராணுவத் தளபதி பதவிக்கான போட்டியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால் இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகுவை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.