வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் காயம்
ஜீப் வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் கொடகவெல,பலங்கொட,ராகலை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த நான்கு பெண்கள் மற்றும் ஒரு ஆண் காயமடைந்து மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், டிக் ஓயா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழுவொன்று நேற்று (29) அன்று சிவனொளி பாதமலைக்கு யாத்திரை சென்று திங்கட்கிழமை (30) அன்று திரும்பி கொடகலவெலை நோக்கி வந்து கொண்டிருந்த போது நல்லத்தண்ணி – மஸ்கெலியா பிரதான வீதி பிரவுன் தோட்ட பகுதியில் வைத்து இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது ஜீப் வண்டியில் ஏழு பேர் பயணித்ததுள்ளதாகவும் அதில் இருந்த குழந்தையொன்று மற்றும் சாரதி சிறு காயங்களுக்குள்ளாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜீப் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்திற்கான காரணம் என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.