அரிசி விநியோகத்தில் உள்ள பிரச்சனையால் தான் அரிசி மக்களை சென்றடையவில்லை
அரிசி நாட்டுக்கு போதுமான அளவு உற்பத்தியாகின்ற போதிலும் அதனை விநியோகிப்பதில் உள்ள பிரச்சினையால் மக்களுக்கு உரிய முறையில் சென்றடையாமல் உள்ளது என கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.
வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் சனிக்கிழமை வட மாகாண சபையின் சமூகசேவை திணைக்கள மண்டபத்தில் “அரிசி அரசியலும் அதனை எதிர்கொள்வதில் கூட்டுறவின் வகிபாகமும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
அதில் வங்கியின் தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர் மற்றும் வட மாகாண சபையின் மகளிர் விவகாரம், கூட்டுறவு சமூக சேவைகள் மற்றும் தொழில்துறை அமைச்சின் செயலாளர் திரு. பொன். வாகீசன் ஆகீயோர் சிறப்புரையாற்றினார்கள்.
குறித்த கலந்துரையாடலில் அரிசியின் அரசியலை பற்றி விளக்கி கலாநிதி அகிலன் கதிர்காமர் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
1953ம் ஆண்டு அரிசியின் விலையை சடுதியாக அரசாங்கம் அதிகரித்ததால் பெரும் ஹர்த்தால் வெடித்தது. இதனால் அன்றைய சட்ட சபை பிரித்தானிய போர் கப்பலில் சந்தத்துடன் பின்னர் நடந்த தேர்தலில் அக்கட்சி தோல்வியடைந்தது.
அவ்வாறான போராட்டத்தால் 25% அரிசியில் தன்னிறைவடைந்திருந்த இலங்கை சில தசாப்த்தங்களிலே 90% தன்னிறைவையடைந்திருந்தது
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி மத்தியில் அரிசியானது எமது உணவுப் பாதுக்கப்பிற்கு முக்கியமானதொன்றாகும். அரிசி நாட்டுக்கு போதுமான அளவு உற்பத்தியாகின்ற போதிலும் அதனை விநியோகிப்பதில் உள்ள பிரச்சினையால் மக்களுக்கு உரிய முறையில் சென்றடையாமல் உள்ளது.
இந்த பின்னனியில் தான் கூட்டுறவு முக்கியமான சமூக நிறுவனமாக உள்ளது. கூட்டுறவால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் விஸ்திரப்டுத்துவதுடன் உணவு பாதுகாப்பிற்காக உணவு விநியோகம் செய்யும் பொது நிறுவனமாகவும் தொழிற்படும். கூட்டுறவால் அரிசியின் விலையை சந்தையில் தீர்மானிக்கும் சக்தியாகவும் மாறமுடியும்.
வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கி வரப்புயர கடன் மூலம் விவசாயிகலுடன் தொடர்பில் உள்ளது. 6 வருடத்திற்கு முதல் செய்த வடக்கு கூட்டுறவுகளின் அரிசி ஆலைகள் தொடர்பான ஆய்வு இங்குள்ள 16 கூட்டுறவுகளின் அரிசி ஆலைகளும் முழு திறனில் இயங்குமானல் 10,000 மெற்றிக் தொன் நெல் அடிக்கலாம்.
அரசாங்கம் தேசிய உற்பத்தியில் 10% கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளது. இந்நிலையில் வடக்கில் கூட்டுறவும் இந்த பாதையில் இணைந்து கொள்வனவில் ஈடுபடவேண்டும் என தனது உரையில் தெரிவித்தார்.
இதில் பதிலுரையாற்றிய பொன் வாகீசன்,
உணவு பாதுகாப்புடன் தொடர்புபட்டுள்ள அரிசிக்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கியுள்ள நிலையில் அதற்காக செயற்படும் அரசு மற்றும் அது சார் நிறுவனங்கள் அச்செயற்பாடுகளை சரியாக மேற்பார்வை செய்யவேண்டும்
குறிப்பாக நெல் கொள்வனவு மற்றும் விநியோகத்தில் பலநோக்கு கூட்டுறவு சங்கங்களுக்கு உள்ள கடமையையும் பொன் வாகீசன், வலியுறுத்தினார்.