இங்கிலாந்தில் சிறுமி மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்
இங்கிலாந்தில் 14 வயது சிறுமி ஒருத்தி மாயமாகியுள்ள நிலையில், அவளை பொலிசார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.
இங்கிலாந்திலுள்ள Watford என்னுமிடத்தில் அமைந்துள்ள ஷாப்பிங் சென்டரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் கடைசியாக காணப்பட்டுள்ளாள் அமிஷா (14) என்னும் பள்ளி மாணவி.
அதற்குப் பிறகு அவள் எங்கே சென்றாள் என்பது தெரியவில்லை.
ஆகவே, அமிஷாவை யாராவது கண்டால் உடனடியாக 999 என்னும் அவசர உதவி எண்ணை அழைக்குமாறு பொலிசார் கோரியுள்ளனர்.
CCTV கமெராவில் அமிஷா காணப்படும் காட்சிகளையும் வெளியிட்டு அமிஷாவை தீவிரமாக தேடிவருகிறார்கள் பொலிசார்.