பாகிஸ்தானில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலி
பாகிஸ்தானின் மியான்வாலியில் இருந்து ராவல்பிண்டிக்கு சென்ற பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர் என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த குறித்த பேருந்து, அட்டோக் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக வீதியோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 22 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களைப் பொதுமக்களின் உதவியுடன் காவல்துறையினர் மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
பேருந்து அதிவேகமாகச் சென்றமையே இவ் விபத்துக்குக் காரணம் என அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.