;
Athirady Tamil News

லண்டனில் £10.4 மில்லியன் மதிப்புள்ள நகைகள் திருட்டு: £500,000 பரிசு தொகை அறிவித்த உரிமையாளர்!

0

வடக்கு லண்டனில் உள்ள வீடு ஒன்றில் இருந்து £10.4 மில்லியன் மதிக்கத்தக்க ஆபரண நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் மிகப்பெரிய நகை திருட்டு
வடக்கு லண்டனின் செயிண்ட் ஜான்ஸ் வூட் (St John’s Wood) பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து £10.4 மில்லியன் மதிக்கத்தக்க ஆபரண நகை மற்றும் £150,000 மதிப்புள்ள பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கைப்பைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

20 முதல் 30 வயதுடைய வெள்ளை நிறமுடைய ஆண் ஒருவர், டிசம்பர் 7ம் திகதி அவென்யூ ரோட்டில் உள்ள ஒரு வீட்டிற்குள் மாலை 5 மணி முதல் 5.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இரண்டாவது மாடி ஜன்னல் வழியாக புகுந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த துணிச்சலான திருட்டில், மொத்தம் 10.4 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள உயர்தர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களில் இரண்டு அற்புதமான டீ பியர்ஸ் பட்டர்ஃபிளை வைர மோதிரங்கள்(De Beers butterfly diamond rings), கேத்தரின் வாங்(Katherine Wang) வடிவமைத்த அழகிய இளஞ்சிவப்பு மாணிக்கம் பட்டர்ஃபிளை காதணிகள்(pink sapphire butterfly earrings) மற்றும் வான் கிளிஃப் & ஆர்பெல்ஸ் நிறுவனத்தின்(Van Cleef & Arpels) தங்கம், வைரம், மாணிக்கம் கழுத்தணி(sapphire necklace) ஆகியவையும் அடங்கும்.

இதனுடன் 15,000 பவுண்ட் ரொக்கம் மற்றும் ஹெர்மஸ் நிறுவனத்தின் பிரபலமான குரோக்கோடைல் கெல்லி மாடல் ஹேண்ட் பேக்குகள் ஆகியவையும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

பரிசு தொகை அறிவிப்பு
இந்நிலையில், திருடப்பட்ட பொருட்களை மீட்கும் உறுதியுடன் வீட்டு உரிமையாளர்கள், குற்றவாளியை கைது செய்து தண்டனை பெற்றுத் தரும் தகவலுக்கு 500,000 பவுண்ட் பரிசு அறிவித்துள்ளனர்.

மெட்ரோபொலிட்டன் பொலிஸார், திருடன் கருப்பு ஹூடி, கார்கோ பேண்ட் மற்றும் சாம்பல் நிற பேஸ்பால் தொப்பி அணிந்து முகத்தை மறைத்துக் கொண்டு இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

திருடப்பட்ட பொருட்களில் பல தனித்துவமானவை என்பதால் அவற்றை எளிதில் அடையாளம் காண முடியும் என காவல்துறை அதிகாரி பவுலோ ராபர்ட்ஸ்(Paulo Roberts) தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.