;
Athirady Tamil News

மனுஷ நாணயக்கார குடும்பத்தோடு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்

0

கடந்த அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சராக இருந்த மனுஷ நாணயக்கார நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சுவிட்சர்லாந்திற்கு சென்ற அவர் , பின்னர் வேறு ஒரு ஐரோப்பிய நாட்டிற்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் முதலில் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளதாகவும் , அதன் பின்னர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை அந்நாட்டுக்கு அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், அவரது நெருங்கிய உறவினர் ஒருவரிடம் கேட்டபோது, ​​வருட இறுதியில் தனிப்பட்ட பயணமாக மட்டும் வெளிநாட்டில் இருப்பதாகவும், விரைவில் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக மக்களை ஏமாற்றிய குற்றச்சாட்டின் பேரில் , அவரது சகோதரர் இரகசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே , முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக இருந்த மனுஷ நாணயக்கார நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.