;
Athirady Tamil News

தமிழக ஆளுநரை தவெக தலைவர் விஜய் சந்தித்த நோக்கம் என்ன? இரண்டு காரணங்கள்

0

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துள்ளார்.

ஏன் சந்தித்தார்?

சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில், எல்லா சுழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக துணை நிற்பேன், அண்ணனாகவும், அரணாகவும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், கிண்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தவெக தலைவர் விஜய் சந்தித்து பேசினார்.

அப்போது அண்ணா பல்கலை கழக மாணவி வன்கொடுமை தொடர்பாக ஆளுநரிடம் மனு அளித்துள்ளார் இச்சந்திப்பின்போது தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பு தொடர்பாக தமிழக வெற்றி கழகம் வெளியிட்ட அறிக்கையில், “இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தலைமையில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து மனு அளித்தோம்.

எங்கள் மனுவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.

மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.

இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளைக் கேட்ட ஆளுநர், அவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.