முல்லைத்தீவு சின்னாறு பொழுதுபோக்கு பூங்கா கரைதுறைபற்று பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டது

தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் நிதியீட்டத்தின் மூலம் 11.68 மில்லியன் ரூபா செலவில் 2018ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட முல்லைத்தீவு சின்னாறு பொழுதுபோக்கு பூங்கா, வடக்கு மாகாண விவசாய அமைச்சின் நிதியீட்டத்தின் ஊடாக புனரமைக்கப்பட்டு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால், 2024ஆம் ஆண்டு உலக மண் தினத்தை முன்னிட்டு கரைதுறைபற்று பிரதேச சபையிடம் இன்று செவ்வாய்க்கிழமை (31.12.2024) கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.