2025 புது வருடத்தை வரவேற்ற முதல் நாடு எது தெரியுமா !
மத்திய பசிபிக் தீவு நாடான கிரிபட்டி (Kiribati) தீவில் ஆங்கிலப் புத்தாண்டு (2025) ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2025 புத்தாண்டை உலகிலேயே முதல் நாடாக கீரிப்பட்டி (Kiribati) , டோங்கா தீவுகள் வரவேற்று இருக்கிறது.
ஷகிரிபாட்டி (Kiribati) தீவில் புத்தாண்டை வரவேற்று மக்கள் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
வானவேடிக்கை காட்சி
அதேவேளை 2025 ஆம் ஆண்டினை வரவேற்ற முதல் தீவாக கிரிபட்டி தீவு (Kiribati) உள்ளதுடன் நியூசிலாந்திலும் புத்தாண்டு பிறந்துள்ளது.
2025 இல் நுழைந்த உலகின் முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றனர். நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில், சின்னமான ஸ்கை டவர் விழாக்களின் மையப்பகுதியாக செயல்பட்டது.
பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் வானவேடிக்கை காட்சியுடன் திகைக்க வைத்ததுடன் ஆயிரக் கணக்கானோர் கரையோரத்தில் கூடி ஆரவாரம் செய்தும் பாடியும் வானத்தை வண்ணமயமான வண்ணங்களால் பிரகாசிக்கச் செய்ததுடன் மகிழ்ச்சியுடன் புத்தாட்டை வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.