உக்ரைனுக்கு அஞ்சி புத்தாண்டில் ரஷ்யாவை நிசப்தமாக்கிய புடின்
உக்ரைனுக்கு (Ukraine) எதிரான போர் நீடித்துவரும் நிலையில், ஆளில்லா விமான தாக்குதல்களுக்கு பயந்து புத்தாண்டு நள்ளிரவு வாணவேடிக்கைகளை இரத்து செய்துள்ளார் ரஷ்ய (Russia) ஜனாதிபதி புடின் (Vladimir Putin).
புத்தாண்டை முன்னிட்டு ரஷ்ய ஜனாதிபதி மாளிகைக்கு அருகே ஆண்டு தோறும் முன்னெடுக்கப்படும் pyrotechnics நிகழ்ச்சிகள் மற்றும் புனித பசில் பேராலய வளாகத்தில் நடத்தப்படும் வாணவேடிக்கைகள் உலக அளவில் பிரபலமான நிகழ்ச்சிகளாகும்.
ஆனால் இந்த ஆண்டு செஞ்சதுக்கம் பல மணிநேரங்களுக்கு உல்லாசப் பயணிகளுக்கு மூடப்பட்டிருக்கும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
நள்ளிரவு கொண்டாட்டங்கள்
மேலும் ரஷ்யாவின் முக்கிய நகரங்களிலும் நள்ளிரவு கொண்டாட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் பசிபிக் தலைநகர் விளாடிவோஸ்டாக் உட்பட கொண்டாட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது.
போரினால் காயமடைந்தவர்கள் வாணவேடிக்கைகளால் எழும் சத்தத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் வாணவேடிக்கை மறைவில் உக்ரைன் ஆளில்லா விமான தாக்குதலை முன்னெடுக்கலாம் என்ற அச்சம் காரணமாகவே கொண்டாட்டங்கள் இரத்து செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுளள்து.