எக்ஸ் முகப்பு பக்கத்தில் பெயர் மற்றும் புகைப்படத்தை திடீரென மாற்றிய எலான் மஸ்க்!
எக்ஸ் சமூக ஊடகத்தின் தலைவரான எலான் மஸ்க், தனது எக்ஸ் முகப்பு பக்கத்தில் உள்ள பெயர் மற்றும் புகைப்படத்தை மாற்றியுள்ளார்.
இதன்படி, எலான் மஸ்க், தன்னுடைய எக்ஸ் முகப்பு பக்கத்தில் உள்ள பெயரை கெகியஸ் மேக்சிமஸ் என மாற்றம் செய்துள்ளார்.
இதேபோன்று, அதில் உள்ள புகைப்படமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பெப் தி பிராக் என்ற தவளையின் படம் இடம் பெற்றுள்ளது.
தங்க கவசம் அணிந்து, காணொளி கேம் விளையாடும் சாதனம் ஒன்றை கையில் பிடித்தபடி அந்த தவளை காணப்படுகிறது.
இந்த தவளை பற்றிய புகைப்படம் பல ஆண்டுகளாக ஓன்லைனில் வைரலாகி உள்ளது.
நகைச்சுவை மற்றும் கிண்டல் ஆகியவற்றை அடையாளப்படுத்தும் வகையில் அனைத்து வகையிலான பதிவுகளிலும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.