;
Athirady Tamil News

தென்கொரியா விமான விபத்து; உடல்களுக்காக காத்திருக்கும் உறவுகள்!

0

தென்கொரிய விமானவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை பார்ப்பதற்கு இன்னமும் சந்தர்ப்பம் வழங்கப் படாதமை குறித்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

விமானவிபத்தில் உயிரிழந்த தங்கள் குடும்பத்தவர்களின் உடல்களை பார்ப்பதற்காக உறவினர்கள் முவான் சர்வதேச விமானநிலையத்தில் தங்கியுள்ளனர். இந்நிலையில் காத்திருக்கும் உறவினர்கள் கூறுகையில்,

உடல்கள் மிகமோசமாக சிதைவடைந்துள்ளது
உடல்களை நாங்கள் பார்ப்பதற்கான ஏற்பாடு செய்யப்படும் என வாக்குறுதி வழங்க முடியுமா என ஒருவர் உணர்ச்சி வசப்பட்டவராக கேள்வி எழுப்பினார்.

உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுங்கள் என மற்றைய நபர் ஒருவர் வேண்டுகோள் விடுத்தார். ஷின் கியு கோ என்பவர் தனது இரண்டு பேரப்பிள்ளைகளையும் மருமகனையும் விமானவிபத்தில் இழந்துள்ளார்.

உடல்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் தாமதமடைவது குறித்து ஏமாற்றம் வெளியிட்டுள்ள அவர் பொலிஸார் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு பயன்படுத்தும் சாதனங்கள் மீது தாக்குதலை மேற்கொள்வது குறித்து சிந்தித்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

எனது மருமகனின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் ஆனால் எனது பேரப்பிள்ளைகளின் உடல்களை அடையாளம் காணமுடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மிகமோசமாக சிதைவடைந்துள்ளதால் அவற்றை இனங்காணுவது கடினமாக உள்ளது அதன் காரணமாகவே உடல்களை காண்பிப்பது தாமதமாகின்றது என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.