நான் தாக்கப்பட்டேன், கீழே விழுகிறேன்! ரஷ்ய ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய உக்ரைனின் ட்ரோன் படகு
உக்ரைனின் ட்ரோன் படகு நடத்திய ஏவுகணை தாக்குதலில் ரஷ்ய ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய ஹெலிகாப்டர்
உக்ரைனின் இராணுவ உளவுத்துறை ஒரு ஏவுகணை ஏந்திய ட்ரோன் படகு மூலம் ரஷ்ய Mi-8 ஹெலிகாப்டரை வெற்றிகரமாக வீழ்த்தியதாக அறிவித்துள்ளது.
இது உக்ரைனின் கடல் போர் முயற்சிகளில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அடையாளம் காட்டப்படுகிறது.
“குரூப் 13” சிறப்புப் பிரிவினரால் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், ஏவுகணை ஆயுதங்களுடன் பொருத்தப்பட்ட மாகுரா V5 கடல் ட்ரோன்(Magura V5) பயன்படுத்தப்பட்டுள்ளது.
உக்ரைனிய ட்ரோன் படகுகள் முன்னதாகவே ரஷ்ய ஹெலிகாப்டர்களை இயந்திர துப்பாக்கிகளால் தாக்கியிருந்தாலும், இது ஒரு USVs (Uncrewed Surface Vessel)யிலிருந்து வெற்றிகரமான நில-வான் ஏவுகணை தாக்குதலின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட முதல் ரஷ்ய ஹெலிகாப்டர் வீழ்த்துதல் நிகழ்வாகும்.
கிரிமியாவின் கேப் தர்கான்குட்(Cape Tarkhankut) அருகே நிகழ்ந்த தனி சம்பவத்தில், இடைமறிக்கப்பட்ட வானொலி தொடர்புகளில் ஒரு ரஷ்ய Mi-8 ஹெலிகாப்டர் விமானி “482, நான் தாக்கப்பட்டேன், கீழே விழுகிறேன்!” என்று கூவியதைக் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மற்றொரு ஹெலிகாப்டர் தீப்பிடித்து சேதமடைந்தாலும் தளத்திற்கு திரும்ப முடிந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஹெலிகாப்டர் சேதமடைந்தற்கான வீடியோ சான்றுகள் எதுவும் இல்லை.