;
Athirady Tamil News

சுவிஸ் விமானத்தில் திடீர் புகை ஏற்பட்ட சம்பவத்தில் ஒருவர் மரணம்

0

சுவிட்சர்லாந்தில் பயணிகள் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திடீரென எழுந்த புகை
கடந்த 23ஆம் திகதி ரொமேனியாவின் Bucharest நகரில் இருந்து, சுவிஸின் சூரிச் நகருக்கு சர்வதேச விமானம் ஒன்று புறப்பட்டது.

நடுவானில் விமானம் பறந்தபோது எஞ்சின் கோளாறினால் உள்ளே திடீரென புகை எழுந்ததால், ஆஸ்திரிய விமான நிலையில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது.

பின்னர் பயணிகள் மற்றும் பணியாளர்கள் விரைவாக வெளியேற்றப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மரணத்தால் அதிர்ச்சி
இந்த நிலையில் விமானத்தில் இருந்த கேபின் குழு உறுப்பினர்களில் இருவரான இளம் வயது நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுவிஸ் சர்வதேச ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “திங்களன்று Grazயில் உள்ள மருத்துவமனையில் எங்கள் இளம் சக ஊழியர் இறந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் நாங்கள் தெரிவிக்கிறோம்” என்றார்.

அதேபோல் தங்களது அன்பான சக ஊழியரின் மரணத்தால் நாங்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளோம் என தலைமை நிர்வாகி Jens Fehlinger தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.