யாழ் மாவட்ட செயலகத்தின் 2025ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வும் “க்ளீன் சிறி லங்கா” பிரசைகள் சத்தியப் பிரமாணம் எடுத்தல் நிகழ்வும்
யாழ் மாவட்ட செயலகத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வும் ” Clean Sri Lanka ” பிரசைகள் சத்தியப் பிரமாணம் எடுத்தல் நிகழ்வும்
மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (2025.01.01) காலை 8.30 மணிக்கு மாவட்ட செயலகம் முன்றலில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் அவர்களினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 02 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், உத்தியோகத்தர்களினால் “Clean Sri Lanka ” பிரசைகள் சத்தியப் பிரமாண உறுதிமொழி எடுக்கப்பட்டது.