வரலாற்றுச் சாதனையை பதிவு செய்த சுங்கத் திணைக்களம்
கடந்த வருடத்தில் இலங்கை சுங்கத்துறை 1.5 ட்ரில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தை பதிவு செய்துள்ளது.
இதன்படி, கடந்த வருடம் 1.515 இலட்சம் கோடி ரூபா வருமானம் பதிவாகியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் வரிக் கொள்கை
வருடமொன்றில் இலங்கை சுங்கத்தால் ஈட்டப்பட்ட அதிகூடிய வருமானமாகும். 2024ஆம் ஆண்டுக்காக அரசாங்கம் வழங்கிய 1.533 இலட்சம் கோடி ரூபா வருமான இலக்கை இலங்கை சுங்கம் அடைய முடிந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அரசாங்கத்தின் வரிக் கொள்கை, இறக்குமதியின் அளவு அதிகரிப்பு மற்றும் சுங்க முகாமைத்துவத்தினால் மேற்கொள்ளப்படும் வரி அறவீடு நடவடிக்கையின் வினைத்திறன் என்பன இதற்கு தாக்கம் செலுத்தியுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.