2025 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு
2025 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.தொடர்ந்து சத்தியப்பிரமாணம் இடம்பெற்றது.
நிகழ்வில் துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா, பதிவாளர், பீடங்களின் பீடாதிபதிகள், பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.