;
Athirady Tamil News

கடையில் புகுந்து திருட்டில் ஈடுபட்ட நபரை பிடிக்க முயன்ற காவலர்களுக்கு நேர்ந்த நிலை! சிக்கிய திருடன்

0

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இரண்டு காவலர்களை சுட்டுவிட்டு தப்பியோடிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பல்பொருள் நிலையத்தின் ஒரு கடையில் சுமார் 1,000 அமெரிக்க டொலருக்கும் அதிகமான பொருட்களை திருடி சென்ற நபரை காவலர்களை தடுக்க முயன்றபோது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்.

இச்சம்பவத்தில் இரண்டு காவலர்கள் காயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் (30-12-2024) நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் தப்பியோடிய நபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில், காவலர்களை துப்பாக்கியால் சுட்ட நபரை கலிபோர்னியாவின் வெஸ்லேக்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் இன்றையதினம் (01-01-2025) தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.