;
Athirady Tamil News

முடிவுக்கு வந்த ஐரோப்பா எரிவாயு விநியோகம்!

0

உக்ரேன் வழியாக ஐரோப்பாவிற்கான ரஷ்ய எரிவாயு விநியோகம் 2025 புத்தாண்டு தினத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.

இது ஐரோப்பிய எரிவாயு சந்தையில் மொஸ்கோவின் நீண்ட கால ஆதிக்கத்துக்கான முற்றுப்புள்ளியாக அமைந்தது.

மால்டோவா கடுமையான இழப்புகளை சந்திக்கும்
அதேநேரம், மாற்று வழியை தேடுவதன் மூலம் ரஷ்ய ஆற்றலைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் அதன் முயற்சியையும் இரட்டிப்பாக்கியது. மேற்கண்ட ஒப்பந்தமானது போரிடும் இரு நாடுகளுக்கிடையே 2019 ஆம் ஆண்டில் எட்டப்பட்டது.

உக்ரேனின் எரிவாயு போக்குவரத்து நிறுவனமான Naftogaz மற்றும் ரஷ்யாவின் Gazprom ஆகியவற்றுக்கு இடையேயான 05 ஆண்டு ஒப்பந்தம் காலாவதியான பின்னர்,தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இது ரஷ்யாவின் திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதியை உக்ரேன் வாயிலாக ஐரோப்பிய நாடுகளுக்கு மலிவான விலைகளில் கொண்டு செல்வதற்கு அனுமதித்தது.

இந்த ஒப்பந்தம் மிகவும் இலாபகரமானது, ரஷ்யாவுக்கு வருவாயிலும், உக்ரேனுக்கு போக்குவரத்து கட்டணத்திலும் பில்லியன்களை சேர்த்தது.

இந்த நிலையில், ஒப்பந்தம் நிறைவு குறித்து கருத்து வெளியிட்டுள்ள உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky),

“எங்கள் இரத்தத்தில் கூடுதல் பில்லியன்களை சம்பாதிக்க” ரஷ்யாவை அனுதிக்க மாட்டோம் என்றதுடன், ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அறிவித்தார்.

ஐரோப்பாவிற்கான ரஷ்யாவின் பழமையான எரிவாயு வழியை நிறுத்துவது, 2014 இல் உக்ரேனிய கிரிமியன் தீபகற்பத்தை இணைத்ததில் தொடங்கி, கண்டத்துடன் ஒரு தசாப்த கால கொந்தளிப்பான உறவுகளை முடிவுக்குக் கொண்டுவருகிறது.

2022 பெப்ரவரியில் உக்ரேன் மீது படையெடுத்ததில் இருந்து ரஷ்ய ஆற்றலைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான அதன் முயற்சிகளை ஐரோப்பிய ஒன்றியம் தீவிரப்படுத்தி வருகிறது.

பிரஸ்ஸல்ஸ் வெளியிட்ட புள்ளிவிவரங்கள், 2023 இல் மொத்த எரிவாயு இறக்குமதியில் 8% ரஷ்ய எரிவாயுவாக இருந்ததாகக் குறிப்பிடுகிறது.

இதற்கு மாறாக, அந்த எண்ணிக்கை 2021 இல் 40% க்கு மேல் இருந்தது. பிரஸ்ஸல்ஸ் ரஷ்யாவின் எரிவாயு இறக்குமதியை கணிசமாகக் குறைத்த போதிலும், பல கிழக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் இன்னும் பெரும்பாலும் மொஸ்கோவை நம்பியுள்ளன.

ஆஸ்திரியா மற்றும் ஸ்லோவாக்கியா போன்ற நாடுகள் இன்னும் பெருமளவிலான ரஷ்ய எரிவாயுவை இறக்குமதி செய்கின்றன, இது மொஸ்கோவிற்கு வருவாயில் சுமார் 5 பில்லியன் யூரோக்கள் ஆகும்.

இதேவேளை உக்ரேன் வழியான எரிவாயு விநியோக முடிவினால், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்கள் அல்லாத பிற ஐரோப்பிய நாடுகளும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு காலத்தில் சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த மால்டோவா கடுமையான இழப்புகளை சந்திக்கும் என்றும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.