புற்றுநோய் சிகிச்சையின் இடையே வென்ற கனடா வீராங்கனை! ஒற்றை பதிவால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்
கனடா டென்னிஸ் வீராங்கனை கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி, மார்பக புற்றுநோய் சிகிச்சையில் இருக்கும்போதே விளையாடியதை வெளியப்படுத்தியது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி
பிரபல டென்னிஸ் வீராங்கனை கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி (Gabriela Dabrowski) மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த்துதான் ரசிகர்களை ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.
32 வயதாகும் கனடா வீராங்கனை கேப்ரியேலா, 2023ஆம் ஆண்டில் சுய பரிசோதனையின்போது, தனது இடது மார்பகத்தில் ஒரு கட்டியை எப்படி முதலில் கண்டுபிடித்துள்ளார்.
பின்னர் அதனை மருத்துவரிடம் அவர் கூற, அது வெறும் கட்டித்தான், ஒன்றும் கவலைப்பட தேவையில் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், கேப்ரியேலா கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் பரிசோதனை செய்தபோது அவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது உறுதியானது.
பின்னர் இரண்டு அறுவை சிகிச்சைகளுக்கு கேப்ரியேலா உட்படுத்தப்பட்டார். மேலும் போட்டிகளுக்கு இடையே கதிர்வீச்சு சிகிச்சையை மேற்கொண்டார்.
பலருக்கு அதிர்ச்சியாக இருக்கும்
இந்த நிலையில்தான் மார்பக புற்றுநோய் குறித்து விரிவாக அவர் எழுதியுள்ளார். கேப்ரியேலா தனது பதிவில்,
“சிறிய விடயம் எப்படி இவ்வளவு பெரிய பிரச்சனையை ஏற்படுத்துகிறது? ஏப்ரல் நடுப்பகுதியில் எனக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டபோது நானே கேட்டுக் கொண்ட கேள்வி இதுதான். இது பலருக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்று எனக்குத் தெரியும்.
ஆனால் நான் நன்றாக இருக்கிறேன், நன்றாக இருப்பேன். முன்கூட்டியே கண்டறிதல் உயிரைக் காப்பாற்றும். இதை நான் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கியின் இந்த பதிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தாலும், அவரது போராடும் குணத்தை பாராட்டி வருகின்றனர்.