;
Athirady Tamil News

பொதுவெளியில் முகத்தை மறைக்கும் உடைகளுக்கு தடை: சுவிட்சர்லாந்தில் அமுலுக்கு வரும் சட்டம்

0

உலகின் மிகவும் பாதுகாப்பான மற்றும் வாழ்க்கை தரம் மிக்க நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தில், பொதுவெளியில் முகத்தை மறைக்கும் உடைகளை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டம் 2025 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த தடையானது, 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பின் முடிவின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பெரும்பான்மையான மக்கள் முகத்தை மறைக்கும் உடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாகவே இந்த சட்டம் இயற்றப்பட்டது.

ஏன் இந்த தடை?
பொது பாதுகாப்பு மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவற்றை மேம்படுத்துவதே இந்த தடையின் முக்கிய நோக்கம் என அரசு தெரிவித்துள்ளது.

முகத்தை மறைக்கும் உடைகள் சில சமயங்களில் குற்றச் செயல்களுக்கு உதவியாக இருக்கலாம் என்றும், சமூகத்தில் நம்பிக்கையின்மை மற்றும் பிரிவினையை ஏற்படுத்தலாம் என்றும் கருதப்படுகிறது.

அபராதம் மற்றும் விதிவிலக்குகள்
இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 100 பிரன்சிஸ் (சுமார் ரூ.10,000) அபராதம் விதிக்கப்படும்.

உடனடியாக அபராதத்தை செலுத்த தவறினால், அபராதத் தொகை 1000 பிரன்சிஸாக உயர்த்தப்படும்.

விமானங்கள், தூதரகங்கள், மத வழிபாட்டுத் தளங்கள் மற்றும் சில சுகாதார காரணங்களுக்காக முகத்தை மறைக்க வேண்டிய சூழ்நிலைகளில் இந்த தடை பொருந்தாது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.