;
Athirady Tamil News

கொல்லப்பட்ட ஹமாஸ் மூத்த தளபதி! காசாவில் இஸ்ரேல் நடத்திய துல்லிய தாக்குதல்

0

அக்டோபர் 7ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட ஹமாஸ் மூத்த தளபதியை அழித்து இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.

கொல்லப்பட்ட ஹமாஸ் மூத்த தளபதி
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) செவ்வாய்க்கிழமை ஒரு குறிப்பிட்ட இலக்கு தாக்குதலில் ஹமாஸ் மூத்த தளபதி அப்துல்-ஹாதி சபாஹை(Abd al-Hadi Sabah) அகற்றியதாக(கொல்லப்பட்டதாக) அறிவித்துள்ளது.

ஹமாஸின் மேற்கு கான் யூனிஸ்பட்டாலியனில்(Khan Yunis Battalion) நுக்பா படைப்பிரிவு(Nukhba Platoon) தளபதியாக பணியாற்றிய சபாஹ், கிப்புட்ஸ் நிர் ஓஸ்(Kibbutz Nir Oz) மீதான அக்டோபர் 7 ஆம் திகதி நடந்த கொடூரமான தாக்குதலில் நேரடியாக தொடர்புடையவர் ஆவார்.

தெற்கு காசாவின் கான் யூனிஸ்(Khan Yunis) பகுதியில் துல்லியமான தகவலின் அடிப்படையில் IDF மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்பு(ISA) இணைந்து இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் X தளப் பதிவில் வெளியிடப்பட்ட IDF அறிக்கையில், ஹமாஸ் மூத்த தளபதி அப்துல்-ஹாதி சபாஹ் கான் யூனிஸில்(Khan Yunis) உள்ள மனிதாபிமான பகுதியில் தங்கியிருந்து செயல்பட்டு வந்த நிலையில் அவரை அகற்றி இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் IDF-ன் 162வது “ஸ்டீல்” பிரிவின் கட்டளையின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.