;
Athirady Tamil News

உயர்தரக் கல்வி மாணவர்கள் தொடர்பில் பிரதமர் ஹிரிணி வெளியிட்ட அறிவிப்பு!

0

உயர்தரக் கல்வியை கற்கும் மாணவர்கள் பாடசாலையிலிருந்து விலகியிருக்கும் போக்கு அதிகரித்து வருவது குறித்து ஆழமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.

மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் கண்காணிப்பு விஜயத்தின் போது, ​​வகுப்பறை வருகையில், குறிப்பாக சிறுவர்கள் மத்தியில், குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வருவது தொடர்பில் பிரதமர் கவலை தெரிவித்தார்.

அனைத்து குழந்தைகளுக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை உறுதி செய்வதற்கு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது மிகவும் முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், கலாநிதி அமரசூரிய, சமூக அல்லது பொருளாதார காரணிகளால் பிள்ளைகள் கல்வியைத் தவறவிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டார்.

அதேவேளையில் ஒவ்வொரு பிள்ளையும் 13 வருடங்கள் கல்வி கற்கும் மற்றும் உயர்கல்வியை தொடர்வதற்கான சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

மாணவர்கள் படிப்பில் முழுமையாக ஈடுபடுவதைத் தடுக்கும் தடைகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டிய அவசரத் தேவையை பிரதமர் எடுத்துரைத்தார்.

ஒவ்வொரு குழந்தையின் தேவைகளுக்கும் முன்னுரிமை அளிக்கும் உள்ளடக்கிய கல்வி முறையை வளர்ப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.